வெறும் ஐந்து நாளில் வீடு கட்ட முடியுமா? அசர வைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி
பொதுவாக ஒரு வீட்டை கட்டுவது என்பது அவ்வளவு சாதாரணமான விடயம் இல்லை.
மாறாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் அதற்கு மணல், ஜல்லி, சிமெண்ட், செங்கல் என பல பொருட்கள் தேவைப்படுகின்றது.
பொருட்கள், பணம், ஆட்கள் இப்படி எல்லா வசதிகளும் இருந்தாலும் இலகுவில் ஒரு வீட்டை கட்டி முடியுமா? என்றால் அது கேள்வி குறியாக தான் இருக்கின்றது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை ஆகும்.
இத்தகைய சூழலில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெறும் 5 நாளில் வீடு கட்டி முடிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், 5 நாட்களில் வீடு கட்டி முடிக்க பெங்களூவில் 3D கான்கிரீட் பிரின்டிங் டெக்னாலஜி ஒன்றை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் அப்படி டெக்னாலஜி? அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
3D கான்கிரீட் பிரின்டிங் டெக்னாலஜி
பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள்
அஜாக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனமானது 3டி கான்கிரீட் பிரிண்ட்டிங் இயந்திர தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.
இந்த இயந்திரம் மூலம் 5 நாட்களில் வீட்டை கட்டி முடிக்க முடியும் என்பது தான் வியக்கத்தக்க ஒன்றாகும்.
நிர்வாக இயக்குனரான தலைமை நிர்வாக அதிகாரி சுபப்பிரதா சஹா கூறியதாவது:
“ இந்தியாவிலேயே விரைவாக வீடு கட்டி முடிக்கக்கூடிய தொழில்நுட்பமான 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை உருவாக்கிய முதல் கட்டுமான நிறுவனமானது எங்கள் நிறுவனம். 350 சதுர மீட்டர் வீட்டை,10 மீட்டர் நீளம், அகலத்தில் 9 மீட்டர் உயரத்தில் 3 நாட்களிலேயே கட்டி முடிக்க இயலும். வீடு கட்டுவதற்கு குறைந்தது 3-6 மாதங்கள் ஆகும் இக்காலத்தில் நாங்கள் 3 நாட்களிலேயே கட்டி கொடுக்கிறோம்.” என கூறியுள்ளார்.
வீட்டை எப்படி கட்டுவது?
தேவையான மூன்று முக்கிய பொருட்கள்:
1. Material
2. வீடு கட்டுவதற்கான இயந்திரம் மற்றும் software
3. வீட்டின் திட்டம் அதுமட்டுமின்றி வீட்டின் திட்டத்தை அதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட software மூலம் தான் வழங்கப்படும். அது வீட்டின் வடிவமைப்பை வழங்குகிறது.
இந்த வீட்டின் வடிவமைப்பானது அந்த இயந்திரத்திற்கு input ஆக கொடுக்கப்பட்டு வடிவமைப்பின்படி Material யை பயன்படுத்தி வீட்டை கட்டிக்கொடுக்கும். வீட்டின் சுவரானது சிறிய அடுக்காக இருந்தாலும், இயற்கை பேரிடர்களை தாங்கும் சக்தியுடன் பலமாகவே கட்டப்படும்.
தொழில்நுட்பத்தின் வெளிநாட்டு பயன்பாடு:
ஏற்கனவே இத்தகைய தொழில்நுட்பத்தை வெளிநாட்டில் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னாள் ஐஐடி மாணவர்கள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 21 நாட்கள் சொகுசு வீட்டை கட்டி வாழ்ந்து வந்தார்கள்.
தற்போது பெங்களூரில் 3D பிரிண்டிங் இயந்திர தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடு கட்டி தரப்படும் என அஜாக்ஸ் என்ஜினியரிங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |