காமெடி நடிகர் செந்தில்குமாரின் பீமரத சாந்தி விழா - வைரல் காணொளி
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு 75 வயது நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் பீமரத சாந்தி விழா நடத்தியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் செந்தில் குமார்
நடிகர் செந்தில் தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற கமெடி நடிகராவார்.
இவர் ராமமூர்த்தி மற்றும் திருக்கம்மல் தம்பதியினருக்கு 3வது மகனாக 1951ம் ஆண்டு பிறந்தார். இவர் 12 வயதில் வீட்டை விட்டு வெளியில் வந்து எண்ணை கடை மதுபான கடையில் வேலை செய்துள்ளார்.
இந்த வேலை செய்துகொண்டிருக்கும் போதே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் தேடி அலைந்துள்ளார். இந்த முயற்ச்சியின் விளைவாக ஒரு கோவில் இரு தீபம்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரு்கு வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் 'வைதேகி காத்திருந்தால்' படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.
இதன் பின்னர் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தனர்.
இப்படியாக செந்தில் சினிமாவில் 100 திரைப்படங்கள் நடித்துள்ளார். இது ஒரு பெரும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். இவர் கலைசெல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது 75 வயதை நிறைவு செய்த காமெடி நடிகர் செந்திலுக்கு பீமரத சாந்தி விழா செய்யப்பட்டுள்ளது. இதன்போது எடுக்கபட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பீமரத சாந்தி விழா
இந்நிலையில் நடிகர் செந்திலின் பீமரத சாந்தி விழா உலக புகழ் பெற்ற அமிர்தகடேஷ்வரர் உடனாகி அபிராமி அம்மன் கோவிலில் குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
அதில், நடிகர் செந்தில் தனது மனைவிக்கு கழுத்தில் மாலை அணிவித்து, சில சடங்குகளும் நடைபெற்றன. இந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வரைலாகி வருகின்றது. பலரும் செந்திலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |