personality test: பிடித்த நிறம் தெரிந்தால் அவர்களின் குணத்தை சொல்லலாமா? முயற்சி செய்து பாருங்க
பொதுவாக வாழ்க்கையில் நிறங்கள் முக்கிய இடம் வகிக்கிறது.
நம் ஆடைகளை தெரிவுச் செய்யும் போது வண்ணங்களை தான் முதலில் கவனிப்போம்.
வண்ணங்கள் மற்றும் அதன் ஆளுமை, மனநிலையைப் பற்றி நிறைய சொல்ல முடியும்.
அந்த வகையில் நாம் அடிக்கடி தெரிவு செய்யும் நிறங்களை வைத்து நம்முடைய குணங்களை கணிக்க முடியும். அது தொடர்பான விடயங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நிறங்களின் தெரிவு
1. சிவப்பு
சிவப்பு நிறம் மற்ற நிறங்களை விட தடித்த நிறமாக பார்க்கப்படுகின்றது. எப்போதும் ஆர்வம், ஆற்றல் மற்றும் உற்சாகத்தை குறிக்கும். சிவப்பு நிறத்தில் ஆடை அணிபவர்கள் தனித்துவமானவராக இருப்பார்கள். இந்த நிறத்தை தெரிவு செய்பவர்கள் அன்பு மற்றும் சக்தியுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
2. நீலம்
நீலம் ஒரு அமைதியான நிறமாக பார்க்கப்படுகின்றது. நம்பிக்கை, அமைதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய நீல நிறத்தை அமைதியான குணம் கொண்டவர்கள் அதிகமாக தெரிவு செய்வார்கள். நீல நிறம் ஸ்திரத்தன்மையுடன் இணைந்திருப்பதால் தொழில்முறை அமைப்புகளில் பிரபலமாக இருக்கிறது.
3. மஞ்சள்
மஞ்சள் நிறம் பிரகாசமான நிறங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இதனால் அதிகமான விஷேசங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் நிறம் அணிவது ஒருவரை நட்பாகவும் எளிதில் அணுகக்கூடியவராகவும் காட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |