chanakya-niti: பணத்தை இப்படி செலவழித்தால் பலமடங்கு அதிகரிக்குமாம்.. இனிமே இப்படி பண்ணாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழையும் குருபகவான்:சிம்மாசனத்தில் உட்காரப்போகும் ராசிகள் இவர்கள் தான் நீங்க என்ன ராசி?
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றின் படி, ஒருவர் பணம் பெறும் போதெல்லாம் சில விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் பணத்தை சம்பாரிக்க வேண்டும் என்றால் அதற்கான சில விதிமுறைகள் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பணத்தை பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்
1. சிலர் பணம் சம்பாதித்தவுடன் திமிர்பிடித்தவர்களாக மாறிவிடுவார்கள். அந்த தவறை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் செய்ய வேண்டாம் என சாணக்கியர் கூறுகிறார். மற்றவர்கள் அந்த தவறை செய்யும் போது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவி மகிழ்ச்சியடைய மாட்டார். பணம் அதிகரிக்காது. இப்படியான செயல்களை புறக்கணிக்கும் போது லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
2. பணம் கிடைக்கும் போதெல்லாம் அதை நன்றாக சிந்தித்து செலவு செய்ய வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். ஆடம்பர செலவுகள் அதிகரித்தால் பணத்தை ஒருகாலமும் சேமித்து வைக்க முடியாது. பணம் ஒரு சிறந்த நண்பனாக பார்க்கப்படுகின்றது. இப்படியான சூழலில் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்காதவர்கள் மோசமான காலங்களில் சிரமப்படுவார்கள்.
3. செல்வம் கைக்கு வரும் போது அதைப் பற்றி வெளியாட்களிடம் சொல்லக்கூடாது என சாணக்கியர் கூறுகிறார். ஏனெனின் உங்களை பிடிக்காதவர்கள் அதை எப்படி வாங்கலாம் அல்லது திருடலாம் என யோசிப்பார்கள். செல்வம் பற்றிய யாரிடமும் சொல்லாத வரைக்கும் அது கவனமாக இருக்கும்.
4. பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் ஒரு நாளும் யாரையும் அவமதிக்கக் கூடாது. அத்துடன் பணத்தை வைத்து அவமதிப்பது குற்றம் என சாணக்கியர் கூறுகிறார். இந்த செயல் லட்சுமி தேவியின் அதிருப்தியை சந்திக்க நேரிடும், இதனால் உங்கள் வீட்டிற்குள் வறுமை நுழையும்.
5. சாணக்கிய நீதி படி, பணம் சம்பாதித்தால் மட்டுமல்ல அதனை சரியாக செலவு செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். கையில் பணம் இருந்தால் சிலர் தண்ணீர் போல் வீணாக்குவார்கள். இந்த குணம் கொண்டவர்கள் பெரும்பாலும் வறுமையில் தான் இருப்பார்கள். எப்போதும் பணம் விடயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |