வாழைப்பழத்தை தின்ற வாலிபர் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்
தமிழகத்தில் எலிக்காக வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை தின்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூரின் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவரது மனைவி தமிழ்ச்செல்வி.
இவர்களுக்கு கார்த்திக்(வயது 19), கவிதாஸ்(15) என 2 மகன்களும் உள்ளனர், இதில் கார்த்திக் முதலாமாண்டு பிசிஏ படித்து வருகிறார்.
கடந்த 18-ந் தேதி மாலை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக், டிவி மீது இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார்.
அப்படியே இரவு தூங்கும் போது, திடீரென வாந்தி எடுத்துள்ளார், ஏன் வாந்தி எடுக்கிறாய்? என தமிழ்ச்செல்வி கேட்ட போது, வாழைப்பழத்தை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
உடனே பதறிப்போன தமிழ்ச்செல்வி, அது எலிக்காக விஷம் கலந்து வைக்கப்பட்டது என கூறியுள்ளார், இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திக்கை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள மதுக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
