கோடைக்காலத்தில் சுகரை ஏற விட்டு வேடிக்கை பார்க்கும் இளநீர்! எப்படி தெரியுமா?
பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே இளநீருக்கு தட்டுபாடாக தான் இருக்கும்.
உடல் சூடு அதிகரிக்கும் மாதவிடாய் பிரச்சினை, வெள்ளைபடுதல் பிரச்சினை, வேர்க்குரு என பல பிரச்சினைகள் வந்துவிடும்.
இதனை தடுப்பதற்கு காலையில் தினமும் இளநீர் குடிக்குமாறு பெரியவர்கள் கூறுவார்கள்.
ஆனால் இவ்வாறு தொடர்ந்து குடித்தால் காலப்போக்கில் அதுவும் பிரச்சினையாக வந்துவிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் இளநீரினால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இளநீர் அதிகம் குடிக்கலாமா?
1. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தினமும் இளநீரை எடுத்து கொள்வதால் காலப்போக்கில் இது சர்க்கரையை அதிகரித்து விடுகிறது. ஏனெனின் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கின்றன.
2. நீரழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கும் கிளைசெமிக் குறியீடும் இளநீரில் அதிகமாக இருக்கிறது. இது இரத்திலுள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது.
3. மலச்சிக்கல் பிரச்சினை உடல் சூட்டினாலும் ஏற்படுவதால் இதற்காக தினமும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அது சிறிது காலம் சென்றதும், வயிற்று போக்கை ஏற்படுத்தி விடுகிறது.
4. இளநீரிலுள்ள சோடியம் அளவு அதிகரிக்கும் போது மூட்டு வலி, சிறுநீர்க்கடுப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை வரக்கூடும்.
5. எடை குறைப்பு முயற்சி( டயட்) முயற்சியில் இருப்பவர்கள் இளநீர் அதிகமாக எடுத்து கொள்ளக் கூடாது.
6. இரத்தம் அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் மருந்து வில்லைகள் எடுத்து கொண்டே இளநீர் குடிக்கக் கூடாது. காரணம் இது இன்னும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.