உடல் எடையைக் குறைக்க பால் குடிக்கலாமா?
பொதுவாகவே இப்போது பல்வேறு காரணங்களால் பலருக்கும் உடல் எடை அதிகரித்துக் கொண்டிருக்கும் இதற்கு பால் குடித்தால் எடை குறையுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும்.
உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும். இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும்.
பால் குடித்தால் எடை குறையுமா?
எடை குறைப்பிற்கு பால் சரியானதல்ல என்று சொல்வார்கள். பாலில் உள்ள அதிக கலோரி மற்றும் கொழுப்புச் சத்துதான். ஆனால் உடல் எடையை குறைக்கும் போது, இந்த இரண்டு அம்சங்களையும் புறக்கணிக்க முடியாது.
இருப்பினும், இந்த காரணிகளை மனதில் வைத்துக்கொண்டு, பாலின் மற்ற ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.
இது உண்மையில் எடை இழப்புக்கு உகந்த பானம் என்பதை உணர வைக்கும். பால் உண்மையில் எடை இழப்புக்கு உதவும்.
பால் மற்றும் பால் பொருட்கள் எடையைக் குறைக்க உதவும். பாலில் கல்சியம் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, இது இறுதியில் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
பால் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி புரதம், கல்சியம், நார்ச்சத்து மற்றும் பொற்றாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த சத்துக்கள் உங்களை மனநிறைவுடன் வைத்திருக்க உதவும். இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.