ஸ்பெஷல் இயந்திரம் மூலம் இளநீர் வெட்டி விற்கும் வியாபாரி! திடீரென்று வெடித்த புதிய சர்ச்சை
வியாபாரி ஒருவர் இயந்திரம் மூலம் இளநீரை வெட்டி அதில் இருந்து தூய்மையான முறையில் வாடிக்கையாளர்களுக்கு தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் வியாபாரி ஒருவர் இளநீர் வெட்டுவதற்கென்றே பிரத்யேகமான இயந்திரம் வைத்திருக்கிறார்.
தனது இரு கைகளிலும் பிளாஸ்டிக் கவர் அணிந்திருக்கும் அவர், ஒரு இளநீரை எடுத்து இயந்திரம் மூலம் துளையிட்டு அதனை இயந்திரத்தில் உள்ள மற்றொரு டேங்கில் ஊற்றுகிறார்.
பின்னர் அந்த டேங்க்குடன் இணைந்திருக்கும் குழாயை திறந்து, அதில் இருந்து வரும் இளநீரை பிளாஸ்டிக் கிளாஸில் பிடித்து ஸ்டிரா போட்டு வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்.
பின்னர் இளநீர் குடுவையை அதே மிஷினை கொண்டு நறுக்கி உள்ளே இருக்கும் தேங்காயை எடுத்து வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்.
இதில் எதுவும் கைபடாமல் இருப்பதால் தூய்மையானதாக கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் இதுவரை 43 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இருப்பினும் மற்றொரு புறம் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இளநீர் பிடித்து வழங்கும் கப் மற்றும் ஸ்டிரா ஆகியவை பிளாஸ்டிக் என்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக அமைந்து விடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
