தேங்காய் பால் போட்டு சிக்கன் பிரியாணி செய்ய தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த தேங்காய் பாலை அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என சிலர் நினைத்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் அது விஞ்ஞான ரீதியாக எங்கும் நிருபிக்கப்படவில்லை. விலங்குகளின் பாலூடன் தேங்காய் பாலை ஒப்பிடும் பொழுது கொழுப்பு சத்து குறைவாக இருக்கின்றன.
இந்திய உணவுகளை சமைக்கும் பொழுது அதில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. மாறாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.
இவ்வளவு சிறப்புக்கள் நிறைந்த தேங்காய் பாலை போட்டு சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான அளவு :
சிக்கன் - 1 கிலோ,
தேங்காய் பால் அரிசியின் அளவுக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளவும்.
சீரக சம்பா அரிசி - 1 கிலோ,
வெங்காயம் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
கிராம்பு - 1 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,
பட்டை - 1 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 4,
எலுமிச்சம் பழம் - 1,
பச்சை மிளகாய் - 2,
தயிர் - 1/2 கப்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
புதினா - தேவையான அளவு,
கொத்தமல்லி - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
சிக்கன் பிரியாணி செய்முறை
முதலில் பிரியாணிக்கு தேவையான சாதத்தை தயார் செய்ய வேண்டும்.
அதாவது, பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, உதிரியாக வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
பின்னர் பட்டை, கிராம்பை இஞ்சி, பூண்டுடன் அரைத்து தனியாக பேஸ்ட் போல் வைத்து கொள்ளவும். அதே போல் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும்.
அதன் பிறகு கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும். தேவையான அளவு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்!
முக்கிய குறிப்பு
ரெசிபியை சரியாக பின்பற்றினால் சிக்கன் பிரியாணி இன்னும் சுவையாக வரும்.