பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்!
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பஸ், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு.
பயணத்தின் போது குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுவது இயல்பான விடயம். ஆனால் இதனால் எந்த பயணமும் போகாமல் வீட்டிலேயே இருந்து விடலாம் என்று கூட சிலர் நினைப்பார்கள்.

இந்த பிரச்னை எதனால் ஏற்படுகிறது?அதனை தவிக்க கையாளக்கூடிய எளிய வழிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காரில் அல்லது பஸ்ஸில் பயணிக்கும் போது வாந்தி வருவது போல ஏற்படும் உணர்வை மருத்துவ துறையில் Motion sickness என்று குறிப்பிடுவார்கள்.

எதனால் ஏற்படுகிறது ?
நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்து போகிறோம் என்பதை பல்வேறு சிக்னல் மூலமாகவே உடல் மூளைக்கு தெரிவிக்கின்றது. உதாரணத்துக்கு நாம் நகர்கின்றோம் என்பதை கண்கள் பார்கின்றது.
அதுப்போல நம் காதுகளில் Vestibular apparatus என்று ஒன்று உள்ளது. அது நாம் சரியாக Balanced ஆக இருக்கிறோமா? என்ற சிக்னலை மூளைக்கு அனுப்புகின்றது. அது போல், நம்முடைய மூட்டுகளில் proprioceptors என்ற ரிசெப்டார்ஸ் இருக்கும். அதுவும் இந்த நபர் நகர்கிறார் என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும்

ஆனால், இப்போது காரிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்யும் போது கண்கள் நாம் நகர்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கின்றது. ஆனால், காது மற்றும் மூட்டு நாம் ஒரே இடத்தில் அமர்ந்து தான் இருக்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது.
இதனால் மூளைக்கு குழப்பகரமாக சிக்னல்கள் கிடைப்பதால், ஏதோ ஒவ்வாத பொருள் உடலினுள் வந்துவிட்டது என நினைத்து, அதை வெளியேற்ற,மூளையில் Area postrema என்ற இடத்தில் இருந்து வாந்தி (Vomit) ஏற்படுத்தும் உணர்வை தூண்டிவிடும். இதனால் தான் பலரும் பயணம் செய்யும் போது வாந்தி (Vomit) எடுக்கின்றார்கள்.

தடுப்பதற்கான எளிய வழிகள்
கார் அல்லது பஸ் என்றால் சாலை தெரியும்படியான முன் இருக்கையில் அமர்வது வாந்தி ஏற்படுவதை தடுக்கும். நீங்கள் வானத்திக் ஓட்டுநராக இருப்பது இந்த உணர்வை கட்டுப்படுத்தும்.
இல்லாத பட்சத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்தபடி தூரத்தில் இருக்கும் காட்சிகளை அல்லது பொருட்களை பார்த்துக்கொண்டு வருவது, அதன் மீது கவனத்தை திரை திருப்புவது இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.

ஒருவேளை ஏசியில் இருந்து வரும் வித்தியாசமான மணம் தான் உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ஏசியை நிறுத்திவிட்டு ஜன்னலை திறந்து புத்துணர்வான காற்றை சுவாசிப்பதால், குமட்டல் உணர்வை கட்டுப்படுத்லாம்.
ஒருவேளை ஜன்னல் இருக்கையோ முன் இருக்கையோ உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், கண்களை மூடியபடி சாய்ந்த நிலையில் நிலையில் அமர்வதும், முடிந்தால் தூங்கிவிடுதன் மூலம் கண்கள் மூளைக்கு சிக்னல் அனுப்பி குழப்பும் செயல்பாடு தடுக்கப்படுகின்றது. அதனால் வாந்தி ஏற்படுவதை தடுக்கலாம்.
பேருந்து பயணம், ரயில் பயணம் மேற்கொள்வோர் வாகனம் செல்லும் திசையில் அமர வேண்டும். இந்த பிரச்சினை இருப்பவர்கள் எதிர் திசையில் அமர்வதை தவிர்பது சிறப்பு.

குறிப்பாக பயணம் செய்யப்போவதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டும். பயணத்துக்கு முன்பு பிரியாணி, சிக்கன் என கடினமான உணவுகளை தவிர்ப்பது குமட்டல் உணர்வை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரியும்.
உடலில் நீர்ச்சத்து போதியளவு இருக்கும்போது இயல்பாகவே வாந்தி, குமட்டல் போன்ற சென்சேஷனை தவிர்க்கலாம்.எனவே பயணத்தின் போது குறிப்பிட்டளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதும் உதவி செய்யும்.
உங்களுக்கு ஒத்துக்கொள்கிறது என்றால் மட்டும் இஞ்சி மிட்டாய், புளிப்பு மிட்டாய் அல்லது மின்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது Benadryl என்ற சிரப், Avomine போன்ற சில Motion Sickness தடுப்பு மாத்திரைகளையும் மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |