தூங்குவதற்கு முன் ஒரே ஒரு கிராம்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தூங்குவதற்கு முன் கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் இருக்கின்ற எனத் தெரியுமா? இனி இந்தப் பிரச்சினைகள் எல்லாம் உங்களை நெருகாதாம்.
கிராம்பு
கிராம்பின் மருத்துவ குணங்கள் கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் உணவுக்கு தனி சுவை தருகிறது. கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
இதில், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கிராம்புகளில் காணப்படுகின்றன. கிராம்பானது பல வழிகளில் எமக்கு உதவுகிறது.
பல்வலி, தலை வலி என பலதரப்படப்பட்ட பிரச்சினைகளுக்கு கிராம்பு முதன்மையாக உதவுகிறது. கிராம்புகளை தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், உடல்நல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
தூங்கும் போது கிராம்பு சாப்பிட்டால்
இப்படி பல வலிகளுக்கு மருந்தான கிராம்பை இரவு தூங்கும் சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் பல உண்டு.
இரவில் கிராம்பை சாப்பிட்டால்,
- மன அழுத்தத்தை குறைத்து நன்றாக தூங்க உதவி செய்கிறது
- பற்களும் சிதைவிலிருந்து விடுபட்டு பல் வலி வராது பாதுகாக்கும்
- வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது
- எடை எளிதாகக் குறையும்
- ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்
- மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் குறையும்
- முகப்பருக்கள் வராமல் தடுக்கும்
- கிராம்பு தொண்டை வலியை போக்கவும் உதவுகிறது