எலுமிச்சை ஜுஸ் உடன் இந்த உணவை சாப்பிடவே செய்யாதீங்க... ரொம்ப கஷ்டப்படுவீங்க
வைட்டமின் சி சத்துக்களை அதிகமாக கொண்ட சிட்ரஸ் பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படுமாம்.
ஆரஞ்சு, திராட்சைப் பழம் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, குறிப்பாக வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது.
சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. சிறந்த தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை உறுதிபடுத்தவும் உதவி செய்கின்றது.
சிட்ரஸ் பழங்களுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
சிட்ரஸ் பழங்களுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
பால் மற்றும் பால் பொருட்களுடன் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக் கூடாது. ஏனெனில் சிட்ரஸ் பழத்தில் இருக்கும் அமிலம் பாலில் உள்ள புரதங்களைச் சுருட்டி எதிர்மறையான தன்மையை கொடுக்கும்.
அதிக அமில தன்மை கொண்ட உணவுகளை சிட்ரஸ் படத்துடன் சாப்பிடக்கூடாது. இவை வயிற்று அசௌகரித்தையும், அமில ரிஃப்ளக்ஸ்க்கும் வழிவகுக்கும்.
காரமான உணவுகள், குறிப்பாக கேப்சைசின் அதிகம் உள்ளவை, சில நபர்களுக்கு சிட்ரஸ் பழங்களுடன் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படும். நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
கார்பனேற்றப்பட்ட பானங்களை சிட்ரஸ் பழங்களைக் சாப்பிடக்கூடாது. இவை வாயு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சர்க்கரை அதிகம் உள்ள தீனிகளை சிட்ரஸ் பழத்துடன் சாப்பிடக்கூடாது.
சிட்ரஸ் பழங்களை அதிக சர்க்கரை தின்பண்டங்களுடன் உட்கொள்வது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது. அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ஆகியவற்றின் கலவையானது சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |