உங்களுக்கு கொலஸ்ரோல் இருக்கா? அப்போ இனி இந்த உணவுகளிடம் இருந்து தூரவே இருங்க!
இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே.
தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.
நாம் கடைகளில் விரும்பி சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அதிக கொழுப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும், இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதனை முறையாக பின்பற்றினால் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்
1. முட்டையில் அதிக அளவான புரதம் இருப்பதால் முட்டையில் சுமார் 207 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் இருக்கும்.
2. சீஸில் 20 மில்லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது அதனால் அதனையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
3. மத்தி மீனில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.
4. எண்ணெயில் பொரிக்கும் உணவுகள்
5. விலங்குகளின் கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை சாப்பிடுவது நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.
6. யோகட்டில் அதிக ஊட்டச்சத்து இருந்தாலும் அதில் 31.8mg கொலஸ்ட்ரால் இருக்கிறது.
7. துரித உணவுகள்
8. கடல் உணவு அதாவது நண்டு மற்றும் இறால்
10 குக்கீஸ், கேக்ஸ், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற இனிப்புகள்
போன்ற உணவுகளில் அதிக கொலஸ்ரால் இருக்கிறது. ஆகவே இவற்றை உங்கள் தினசரி உணவில் இருந்து விலக்கி வைத்தால் எதிர்காலத்தில் எந்த வியாதிகளும் இல்லாமல் வாழலாம்.