தித்திப்பான சொக்லேட் கேக் செய்யலாம் வாங்க!
சொக்லேட்டை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா? சொக்லேட் என்று கூறியதுமே நாவில் எச்சில் ஊறும். அதே போல் கேக் விரும்பிகளும் நிறைய பேர் இருப்பார்கள்.
இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் சொக்லேட் , கேக் இரண்டுமே ஒன்றாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்தக் குறிப்பில் சொக்லேட் கேக் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
சொக்லேட் - 400 கிராம்
மைதா மா - 2 கப்
பட்டர் - 2 தேக்கரண்டி
முட்டை - 8
சீனி - 2 கப் (பொடியாக்கியது)
வெனிலா பவுடர் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பட்டரையும் சீனியையும் நன்கு க்ரீம் போல் வரும்வரை கலக்கவும்.
பின்னர் சூடான நீரில் சொக்லேட் துண்டுகளை போட்டு நன்கு கூழ் போல் செய்துகொள்ள வேண்டும்.
அதன்பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நுரை வரும் வரை கலக்கவும்.
பின்னர் அதில் சீனி, பட்டர் கலவையை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
அந்தக் கலவையில் வெனிலா பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து மேலும் கலக்கிக் கொள்ளவும்.
முட்டை, சீனி, பட்டர் கலவையில் சொக்லேட் கூழை சேர்த்து அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மைதாவை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக, ஒரு வாணலியில் பட்டர் தடவி, மாவு, முட்டை கலவையை கொட்ட வேண்டும்.
கேக்கை 35 நிமிடங்களுக்கு வேக வைத்து பின்பு வெட்டி பரிமாறவும்.