அல்டிமேட் சுவையுடன் நோன்பு துறப்பதற்கு குளுகுளு சொக்லேட் புடிங்! ஈஸியான ரெசிபி
பொதுவாக வீடுகளிலுள்ள சிறுவர்களுக்கு சொக்லேட்டை பயன்படுத்தி செய்யப்படும் சுவிட்ஸ்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் சொக்லேட்டை பயன்படுத்தி கேக், பிஸ்கட், மஸ்கட், புடிங் என பல வகையான உணவு வகைகளை செய்யலாம்.
இதனை தொடர்ந்து சொக்லேட் கலந்த உணவுகள் வீட்டிலுள்ள சர்க்கரை வியாதியுள்ளவர்கள் அதிகம் எடுத்து கொள்வது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதனை தொடர்ந்து வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடித்தமான சொக்லேட் புடிங் எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்
சர்க்கரை - 6 மேசைக்கரண்டி
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
பால் - 1½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ தேக்கரண்டி
துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி அதனை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
அந்த கலவையில் மெதுவாக மெதுவாக பாலை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவை மேசையில் வைத்து நன்றாக கலந்து விட்டு, இறுதியில் அடுப்பில் வைத்து தீயில் மிதமாக வைத்து விடடு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கெட்டியான பதத்திற்கு வந்த பின்னர் வெளியில் எடுத்து அதில் தேவையான அளவு வெண்ணிலா எசன்ஸ் கலந்து கப்களில் ஊற்றி கொள்ளவும்.
இறுதியாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும், இதன் பின்னர் குளிர்ந்த பின்னர் மேல் கொஞ்சம் சொக்லேட் துண்டுகளை தூவி பரிமாறினால் சுவையான கேக் புடிங் தயார்!