குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் குல்ஃபி...
சாக்லேட் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சாக்லேட்டுக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது.
அந்த வகையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் குல்ஃபி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
சாக்லேட் (துருவியது) - 1 கப்
சாக்கோ சிரப் - தேவையான அளவு
பால் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
பாதாம், பிஸ்தா - சிறிதளவு
image - sinfully spicy
செய்முறை
முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் நேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
பின்னர் அகன்ற பாத்திரமொன்றில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
பாலானது சுண்டி சற்று கெட்டியானதும் அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் சர்க்கரை கரைந்ததும் அதனை இறக்கி பிஸ்தா, பாதாம் துருவிய சாக்லேட் என்பவ்றறை போட்டு நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்கவேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 1 மணிநேரம் கொதிக்கவிடவும்.
பிரிட்ஜிலிருந்து வெளியில் எடுத்து மிக்சியில் போட்டு நன்கு அடித்து, பிறகு அதை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் மேலே தூவி அதன் நடுவில் குச்சியை வைத்து, 6 மணிநேரம் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இப்போது குளு குளு சாக்லேட் குல்ஃபி ரெடி.
image - You tube