குளு குளு மாம்பழ குல்ஃபி செய்து பாருங்கள்...ஆஹா சுவையோ சுவை!
முக்கனிகளுள் முதன்மையானது மாம்பழம். சுவையிலும் சிறந்தது மாம்பழம். அதுமட்டுமில்லாமல் பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
சரி இனி மாம்பழ குல்ஃபி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - aromatic essense
தேவையான பொருட்கள்
மாம்பழ கூழ் - 1 1/2 கப்
சோள மா - 2 தேக்கரண்டி
பால் - 500 மில்லி
சர்க்கரை - 3/4 கப்
குங்குமப் பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
image - 196 flavors
செய்முறை
மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு சிறு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
வெட்டிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு கூழ் போல அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பால், சோள மா, தண்ணீ்ர சேர்த்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும்.
பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். பின்னர் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்றாக கொதிக்கவைத்து இறக்கவும்.
அதன் பின்னர் குங்குமப் பூவை அந்த பாலில் சேர்த்து கிளறி குளிரவைக்க வேண்டும். அதற்குப்பின் குளிர்ந்த பாலில் ஏலக்காய் பொடி, மாம்பழ கூழ் என்பவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இறுதியாக சின்ன டம்ளரில் இவற்றை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை வைத்து சுவைக்கலாம்.
image - subbush kitchen