துரத்தி வந்த ரசிகர்கள்.. உடனே காரை நிறுத்திய சியான் விக்ரம்
தன்னுடைய ரசிகருக்காக காரை நிறுத்தி விட்டு சியான் விக்ரம் செய்த செயல் காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விக்ரம்
சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் தங்கலான்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு இருந்தது.
மாபெரும் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் சுமாரான வெற்றியை தான் பெற்றது என ரிப்போர்ட் வந்தது. இருந்தாலும் வழக்கம் போல விக்ரமின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம்
இதனை தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகிய வீர தீர சூரன் பலத்த வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் வசூல் தேடி தந்தது.
சியானை கொண்டாடும் சிறுவர்கள்
இந்த நிலையில், சியான் விக்ரம் தன்னுடைய ஆடம்பரமான காரில் சவாரி சென்றுக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய சிறிய ரசிகர்கள் அவருடைய காரை பின்தொடர்ந்தார்கள்.
அந்த அழகான சிறிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கண்ணாடியை இறக்கிவிட்டு பேச்சுக் கொடுத்துள்ளார். அவரின் அந்த செயலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
காணொளியில், சியான் விக்ரம் நரை விழுந்த தாடி மற்றும் தலைமுடியுடன் இருந்துள்ளார். சில சமயங்களில் விக்ரமின் இந்த புதிய தோற்றம் பிரேம் குமாரின் படத்திற்காகவும் இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தலைவன் Look hu 🥵❤️💥🔥🧨
— Chiyaan_Freak🕊️ (@ChiyaanFreak) August 19, 2025
What's cooking #Premkumar 👀#ChiyaanVikram @chiyaan pic.twitter.com/twL6WXHyKT
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
