குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித ரோபோக்கள்! தூள்கிளப்பும் சீன விஞ்ஞானிகள்
சீன நிறுவனமொன்று கர்ப்ப கால ரோபோவை உருவாகும் ஆராய்ச்சியில் முதிர்ச்சிநிலையை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுத்து, சீன விஞ்ஞானிகள் வெற்றி கண்ட நிலையில் தற்போது , கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
குவாங்சோவை தளமாகக் கொண்ட கைவா டெக்னாலஜி, செயற்கை கருப்பை தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் மனித உருவ ரோபோவை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
விலை எவ்வளவு?
இந்த நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் 100,000 யுவானுக்கும் ($13,900) குறைவான விலையில் (இந்திய மதிப்பில் ரூ.12.17 லட்சம்) சந்தை அறிமுகத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
கர்ப்பகால மனித உருவ ரோபோ உட்பொதிக்கப்பட்ட செயற்கை கருப்பை அமைப்பைக் கொண்டுள்ளது.
மனித உருவ ரோபோ அதன் வயிற்றில் பதிக்கப்பட்ட ஒரு செயற்கை கருப்பையை உள்ளடக்கியது, இது கர்ப்ப காலத்தில் கருவை சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.
உயிரியல் கர்ப்ப சுமைகளைத் தவிர்க்க விரும்பும் நபர்களுக்கு கர்ப்ப மாற்றுகளை வழங்குவதை இந்த தொழில்நுட்பம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கர்ப்ப கால ரோபோ மூலம் குழந்தை பெறுவது சாத்தியமானால், குழந்தையின்மை பிரச்சினையில் இது பெரும் புரட்சியையே ஏற்படுத்தும் என எதிவுக்கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |