இனி உருளைக்கிழங்கை இவ்வாறு செய்து பாருங்க...
பொதுவாகவே காய்கறிகளில் உருளைக்கிழங்கு தனிச் சுவையுடையது. இதை குழம்பு, பொரியல், சிப்ஸ் என பல விதங்களில் சாப்பிட்டிருப்போம்.
இதில் விட்டமின் சி, விட்டமின் பி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை இன்னும் வித்தியாசமாக சில்லி பொட்டேட்டோவாக எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5
மைதா மா - 1/4 கப்
சோள மா - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப
உப்பு - தேவையான அளவு
சோஸ் செய்ய
வெங்காயம் - 1
சோயா சோஸ் - 1 தேக்கரண்டி
மிளகாய் சோஸ் - 1 மேசைக்கரண்டி
சில்லி சோஸ் - 1 மேசைக்கரண்டி
நறுக்கி வெ.பூண்டு - 1 தேக்கரண்டி
நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்
தக்களி கெட்ச் அப் - 2 மேசைக்கரண்டி
சோள மா - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மா, சோள மா, மிளகுத்தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் என்பவற்றை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கை கரைத்த மாவில் போட்டெடுத்து பொரித்தெடுக்கவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், நறுக்கிய வெ.பூண்டு என்பவற்றை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
பின்பு அதில் சில்லி சோஸ், தக்காளி கெட்சப், பச்சை மிளகாய் சோஸ், குடைமிளகாய், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அதில் கால் கப் தண்ணீர் சேர்க்கவும். அதன் பின்னர் அதில் கரைத்த சோள மா கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும்.
திக்கான கலவையாக வந்ததும் பொரித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து இறக்கவும்.
அருமையான சில்லி பொட்டேட்டோ ரெடி.