சிக்கன் ரசம் செய்து சாப்பிட்டதுண்டா?... 5 நிமிடத்தில் ஈஸியா செய்திடலாம்
சிக்கன் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். சிக்கனில் நாம் சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, சிக்கன் ஊறுகாய் என விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால், சிக்கனில் ரசம் செய்தால் அதன் சுவை எப்படியிருக்கும் என்று பார்த்ததுண்டா...இதோ சிக்கன் ரசம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - You Tube
தேவையான பொருட்கள்
சிக்கன் (எலும்புடன்) - 1/2 கிலோ
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
வெள்ளைப் பூண்டு - 5 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை, லவங்கம் - தலா 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
image - Samayam Tamil
செய்முறை
முதலாவதாக சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, இஞ்சி, வெள்ளைப் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கடுத்ததாக, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம் இரண்டையும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதன் பின்னர் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக மசியுமாறு வதக்கிக்கொள்ள வேண்டும். இறுதியாக வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகுத் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கி 6 விசில் வரும்வரை வேகவிட வேண்டும்.
வேவைத்தவற்றில் இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.
image - Yummy Tummy Aarthi