Chia Seeds: சைப்பிரியர்கள் ஏன் சியா விதைகள் சாப்பிட வேண்டும்?
ஊட்டச்சத்து அதிகமாக கொண்டுள்ள சியா விதைகளின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சியா விதைகள்
சியா விதைகள், சிறிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
குறிப்பாக அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்களின் தசைகளை வலுப்படுத்த சிரமப்படவே வேண்டாம். சியா விதைகள் நிச்சயம் பல ஆரோக்கிய நன்மையை அளிக்கின்றது.
சைவம் உண்பவர்கள் ஏன் சியா விதைகளை சாப்பிடவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
சத்துக்கள் என்னென்ன?
அளவில் சிறியதாக இருக்கும் சியா விதையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இவை தசை வளர்ச்சிக்கும், தசையை வலுவடையவும் உதவியாக இருக்கின்றது.
இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உடலில் வீக்கத்தை குறைக்க உதவுவதுடன், தசைகளை மீட்டு சருமத்தை பளப்பாக வைக்கின்றது.
நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும் சியா விதைகள் செரிமான பிரச்சினை தவிர்க்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
உடம்பிற்கு தேவையான ஒன்பது அமினோ அமிலங்களை கொண்டதால், சியா விதைகள் புரதச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது.
சருமத்தை இளமையாகவும், இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கின்றது.
சியா விதைகளில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் சியா விதைகளை சாப்பிடும்போது, மயக்கம், சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் உடம்பிற்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.
சியா விதைகளை ஊற வைக்கும் போது, நிறைய தண்ணீரை உறிஞ்சி ஜெல்லாக மாறிவிடுவதால், உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்துக்களை கொடுத்து, தசைகளையும் சரியாக இயங்க வைக்கின்றது.
ஸ்மூத்திகள், ஓட்ஸ் உணவுகள் மற்றும் சாலட்கள், பேக்கிங் செய்யும் உணவுகள் என அனைத்திலும் சியா விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |