செட்டிநாட்டு ஹோட்டல் சுவையில் மஷ்ரூம் சுக்கா - இப்படியும் செய்யலாம்
சைவப் பிரியர்களுக்கு அதிகம் பிடிக்கும் உணவுகளில் ஒன்று தான் காளான் ஆகும்.
அசைவ சுவையில் இருக்கும் இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
தற்போது ஹோட்டல் சுவையில் காளான் சுக்கா எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். இதை செய்வதும் எளிது. இதற்கு மொத்தமாக பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.

தேவையான பொருட்கள்
- மஷ்ரூம் - 200 கிராம்
- பெரிய வெங்காயம் – 2
- பழுத்த தக்காளி -1
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூ
- மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தூள் 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலா அரைக்க
- கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் -2 டேபிள் ஸ்பூன
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2டீஸ்பூன்
- காய்ந்த சிகப்பு மிளகாய் - 4
- கிராம்பு-2
- இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - சிறிதளவு
செய்யும் முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த அனைத்து பொருட்களும் நன்கு ஆறியவுடன் அவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பான விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய தக்காளி, வெட்டி வைத்துள்ள மஷ்ரூம் துண்டுகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அனைத்தும் நன்கு மென்மையாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
கடைசியாக தண்ணீர் இல்லாமல் நல்ல சுக்கா பதத்தில் வற்ற வைத்து பிரட்டி எடுத்தால் மஷ்ரூம் சுக்கா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |