சில்லி பொட்டேடோ சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா? முழு விபரம் இதோ
என்ன தான் உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிப்பிகள் இருந்தாலும் மொறுமொறுப்பான, காரமான சில்லி பொட்டேடோ பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இதில் சுவையான சாஸ்களும் மசாலாக்களும் சேர்த்து பார்க்க பளபளப்பாகவும் சுவையாகவும் காரசாரமாகவும் செய்கிறார்கள். ஆனால் சிறுநீரக ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கும் நபர்கள் இந்த உணவை உட்கொள்ள முடியுமா என்பது கேள்வியாக உள்ளது.
சிலர் இதில் இருக்கும் பாதிப்பு அறியாமல் இருக்கலாம். சிலர் இது சாப்பிட்டால் பாதிப்பு ஆகாது என நினைத்து சாப்பிடுவார்கள்.
உண்மையில் இந்த சில்லி பொட்டேட்டோ டிஷ்ஷை சிக்கலானதாக்குவது இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் இல்லை, மாறாக இதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் அளவு, உப்பு, ஸ்டார்ச் மற்றும் நன்கு வறுப்பது போன்றவை தான்
இதன் காரணமாக ஒரு எளிய காயானது சோடியம் நிறைந்த ஸ்னாக்காக மாறுகின்றது.

சில்லி பொட்டேட்டோ அடிக்கடி உட்கொள்வது, அதிக அளவு சோடியம், பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதனை விரிவாக பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சில்லி பொட்டேட்டோ ஏன் உகந்ததல்ல
சில்லி பொட்டேட்டோ பார்ப்பதற்கு கலராகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கலாம்.
ஆனால் இதை தயாரிக்க சேர்க்கும் பொருட்கள் மிகவும் ஆபத்தானது. உருளைக்கிழங்கில் இயற்கையாகவே பொட்டாசியம் உள்ளது. இது பொதுவாக ஆரோக்கியமான சிறுநீரகங்களால் வடிகட்டப்படுகிறது.
அதே நேரம் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருந்தால் சரியாக இதனை வடிகட்டி வெளியேற்ற முடியாத போது, ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அதிகரித்து தசை பலவீனம் அல்லது ஆபத்தான அளவிலான இதய துடிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் சில்லி பொட்டேட்டோவை அதிகமாக சாப்பிட்டால்ரத்ததில் பொட்டாசியம் லெவலை எளிதில் அதிகரிக்கும்.

வறுத்த எண்ணெய் மற்றும் கொழுப்பு - பொதுவாக உணவகங்களில் தயாரிக்கப்படும் சில்லி பொட்டேட்டோ மொறுமொறுப்பாக இருக்க பெரும்பாலும் இரண்டு முறை எண்ணெயில் வறுக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் எண்ணெய் சார்ந்த சாஸ்களில் போட்டு எடுக்கப்படுகிறது. இந்த செய்முறை தேவையற்ற கொழுப்பை சேர்க்கிறது மற்றும் இன்ஃப்ளமேஷனை ஊக்குவிக்கிறது.
இதனால் சிறுநீரகங்களுக்கு கூடுதல் வளர்சிதை மாற்ற அழுத்தம் ஏற்படுத்துகிறது. இதை வீட்டில் தயாரித்தும் சாப்பிட கூடாது. காரணம் வீட்டிலும் எண்ணெயில் பொறித்து தான் இவை எடுக்கபடுகின்றன.

அதிகப்படியான உப்பு மற்றும் சாஸ்கள் - சில்லி பொட்டேட்டோ ரெசிபிகள் பொதுவாக சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் உப்பு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டது.
இதனால் சில்லி பொட்டேட்டோவில் அதிக சோடியத்தை உருவாக்குகிறது. இதனால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் ஏற்கனவே உள்ள சிறுநீரக நோயை மோசமாக்குகிறது.
இது தவிர உடலில் சோடியம் தேங்குவது தேவையற்ற திரவ குவிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரக செயல்பாடு மேலும் பாதிக்கப்படுகிறது.

சாஸ்களில் காணப்படும் சர்க்கரை - பல சாஸ் பாட்டில்களில் மசாலாவை சமப்படுத்த சர்க்கரை உள்ளது. எப்போதாவது சிறிது சர்க்கரை சேர்த்து கொள்வது நல்லது என்றாலும்,
அடிக்கடி இதனை பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றான நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே சில்லி பொட்டேடோ எப்பவாவது ஒரு முறை சாப்பிடலாம் தப்பில்லை. ஆனால் அதிகமாக எடுத்துக்கொண்டால் மேற்கூறிய போதிப்புகள் வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |