நாக்கில் வச்ச உடனே கரையும் பாதாம் அல்வா- Chef வெங்கடேஷ் பட் ரெசிபி இதோ!
பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என பலரும் கூறியிருப்பார்கள். அத்துடன் பாதாம் சாப்பிடுவதால் முகம் பொலிவு மற்றும் முக சுருக்கம் நீங்கும் என கூறப்படுகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கும் பாதாம் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட பாதாமை வைத்து ஒரு சுவையான பாதாம் அல்வா செய்யலாம்.
அந்த வகையில், பாதாம் அல்வாவை எப்படி வெங்கடேஷ் பட் ஷ்டைலில் செய்வது எப்படி என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்
- பாதாம்
- சர்க்கரை
- நெய்
- உப்பு
- குங்குமப்பூ
அல்வா செய்முறை
தேவையான அளவு பாதாம் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதனை ஈரப்பதத்துடன் எடுத்து சுத்தமான மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
இதனை தொடர்ந்து, ஒரு கடாயில் பால் ஊற்றி சூடானதும் பாதாம் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதில் குங்குமப்பூ சேர்த்து மிதமான வெப்பநிலையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக நெய் ஊற்றிக் கிளறவும்.
பின்னர் நெய் பாதாம் வாசம் வரும் போது சர்க்கரை போட்டு கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அடிப்பிடித்து விடும்.
கடைசியாக கொஞ்சமாக உப்பு சேர்க்க வேண்டும். கடைசியாக நெய் சிறிது சிறிதாக ஊற்றி கிளறியதும் அது கடாயில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது மீண்டும் கூடுதல் நெய் ஊற்றினால் சுவை கூடுதலாக இருக்கும்.
அடுப்பில் இருந்து இறக்கி வேறு ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு மேலே சிறிது துருவிய பாதாம் போட்டு பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |