இதய ஆரோக்கியத்தை பதம் பார்க்கும் உணவுகள்- பார்த்து சாப்பிடுங்க
பொதுவாக உயிர்களாக பிறந்த அனைவருக்கும் இதய ஆரோக்கியம் என்பது அவசியமானது.
உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்து கொள்வது அவசியம்.
ஏனெனின் இதயத்தில் ஒரு பிரச்சினை வந்து விட்டால் உயிர் போகும் நிலைக்கு கொண்டு செல்லும். மனிதர்கள் குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அதே போன்று வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் இதய ஆரோக்கியத்திலும் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், இதய ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிக்கும் உணவுகள் தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்
1. எண்ணெயில் அதிகம் பொறிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா, சிக்கன், மீன் ஆகிய கொழுப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனின் எண்ணெய் பொறிக்கப்படும் உணவுகளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். இவை அதிகமாக சாப்பிடும் பொழுது கொலஸ்ரோல் படிய ஆரம்பிக்கும்.
2. சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் அரிசி சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளும் சர்க்கரையின் அளவை கூடுதலாக இருக்கும். அத்துடன் பிரட், கேக், போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
3. அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் உடல் நலத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தும். அதாவது உடல் ஆரோக்கியத்தில் உப்பு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஊறுகாய், அப்பளம், சால்ட் ஆகிய உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
4. சிலர்செயற்கை குளிர் பானங்கள். தாகத்திற்காகவும் சுவைக்காகவும் வாங்கி குடிப்பார்கள். இதிலிருக்கும் இரசாயனங்கள் இதயத்தை, கல்லீரல் ஆகிய உறுப்புக்களை பாதிக்கிறது. அத்துடன் மோர், இளநீர், பழசாறு உள்ளிட்ட பானங்களும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
5. இதய ஆரோக்கியத்தை பாதிக்க்கும் உணவுகளில் அல்கஹால் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவது அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |