சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன் பன்னீர் நெய் ரோஸ்ட் ! இனி வீடே மணமணக்கும்
பொதுவாக அநேகமான வீடுகளில் காலை அல்லது இரவு நேரங்களில் சப்பாத்தி தான் உணவாக இருக்கும். இதனால் அன்றைய நாளுக்கு சப்பாத்திக்கு என்ன தொட்டுக் கொள்ளலாம் என சந்தேகம் இருக்கும்.
இதன்படி, சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷனான பன்னீர் நெய் ரோஸ்ட் எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு
தனியா தூள் - அரை டீஸ்பூன்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு எ
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
வறுப்பதற்கு தேவையான பொருட்கள்
தனியா - 2 1/2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்- 12
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் கொஞ்சம் புளி எடுத்து சிறிது தண்ணீரில் கலந்துக் கொள்ளவும் பின்னர் பன்னீர் மற்றும் கொத்தமல்லி என்பற்றை நறுக்கிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து காஷ்மீர் மிளகாவை சூடு தண்ணீரில் போட்டு சுமார் 1மணி நேரத்திற்கு போட வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வறுக்க தேவையான பொருட்களை பச்சை வாசம் போகும் வரை வறுக்க வேண்டும்.
வறுத்தெடுத்த தனியா, ஊறவைத்த மிளகாய், மிளகு, சீரகம், காஷ்மீர் மிளகாய், கடுகு, 1 1/2 தயிர், புளிக்கரைசல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸி சாரில் போட்டு மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, அதில் பன்னீரை போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொண்டு இருக்கும் போது அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதில் உப்பு சேர்த்து 3 ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிளறி, தனியா தூள், கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கினால் பன்னீர் நெய் ரோஸ்ட் தயார்!