10 நிமிடத்தில் ரெடியாகும் சுவையான வாழைப்பழ பணியாரம்- செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான வாழைப்பழ பணியார ஸ்நாக்ஸை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
- ரவை - அரை கப்
- மைதா - அரை கப்
- சர்க்கரை - முக்கால் கப்
- வாழைப்பழம் - 1
- தேங்காய் துருவல் - கால் கப்
- நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் தண்ணீரில் ரவையை மூன்று மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொள்ளவும்.
சர்க்கரை நன்கு கரைந்து கட்டிப்பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான ரவை வாழைப்பழம்பணியாரம் தயார்.