சாணக்கிய நீதி: திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இந்த விடயங்களை பின்பற்றினாலே போதும்
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் பிரகாரம் திருமண வாழ்கை இறுதிவரை மகிழ்சியாக இருக்க கணவன் மற்றும் மனைவி கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உறவின் தன்மை
சாணக்கிய நீதியின் பிரகாரம் கணவன் மனைவி உறவானது ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்யும் தன்மையில் இருக்க வேண்டும். திருமண உறவில் கணவனும் மனைவியும் ஒரு தேரின் இரு சக்கரங்களைப் போன்று செயற்பட வேண்டும்.
தேரில் ஒரு சக்கரம் நின்றாலும் கூட தேரால் என்படி முன்னோக்கி நகர முடியாதோ அது போல் திருமண உறவில் ஒருவரின் பங்களிகப்பு குறைவாக இருந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.
மதிப்பு
கணவன் மனைவி உறவில் ஆண் பெண் என்ற பாகுபாடு இருக்கவே கூடாது. கணவன் மற்றும் மனைவி இருவரும் சமனானவர்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பாகுபாடு இல்லாத திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.
கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் எதுவாக இருந்தாலும் ஒருவரையொருவர் எந்த சந்தர்ப்பத்திலும் மதித்து நடக்க வேண்டியது அவசியம். கணவன் மனைவிக்கு இடையில் எந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கின்றதோ அந்தளவுக்கு வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
பொறுமை
சாணக்கிய நீதியின் அடிப்படையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பொறுமை இருக்க வேண்டியது இன்றி்யமையாதது. பொறுமை திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.
திருமண வாழ்க்கையில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் இந்த உறவை கடைசிவரை பாதுகாக்க கணவன் மனைவி இருவருமே பொறுமையுடன் செயற்பட வேண்டும். இந்த பொறுமை தான் திருமண உறவை மிகவும் மகிழ்சிகரமாக மாற்ற உதவும்.
தற்பெருமை
கணவன்-மனைவிக்கு இடையில் ஒருபோதும் தற்பொருமை இருக்கவே கூடாது. எல்லா வேலைகளிலும் பாகுபாடு இன்றி இணைந்து செயல்பட வேண்டும்.
ஆணவம் மற்றும் தற்பொருமை இல்லாத திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |