சாணக்கிய நீதி: வாழ்க்கையில் நீ கஷ்டப்பட்டால் இந்த 5 இடங்களுக்கு செல்லாதே
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நிதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நிதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் மனிதன் ஒழுவன் வாழ்க்கையில் கஷ்டப்படுவானாக இருந்தால் அவர் இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல கூடுடாது என சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

சாணக்கிய நீதி
ஒருவருக்கு நல்ல அடையாளம் இருந்தால்தான் வெற்றி அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று சாணக்கியர் விளக்கியுள்ளார். ஒருவரின் அடையாளம், பிம்பத்தைக் கெடுக்கும் சில இடங்களைக் குறிப்பிட்டு, அத்தகைய இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்.
| கல்விக்கு மதிப்பு இல்லாத இடத்தில் | "கல்வி மதிக்கப்படாத இடத்திற்கு எப்போதும் செல்ல கூடாதாம். அது வாழ்க்கையில் நம்மை பின்னோக்கி தள்ளுவதுடன் நமக்கு இருக்கும் நற்பெயரையும் கெடுக்கும் என்கிறார் சாணக்கியர். |
| மரியாதை இல்லாத இடத்தில் | நம்மை யாரும் மதிக்காத இடத்தில் ஒருபோதும் நாம் செல்ல கூடாது. தங்கவும் கூடாது. ஏனெனில் அது நம் வாழ்க்கைக்கு நரகம் போன்றது. ஒரு கணம் கூட அங்கே தங்காதே என்று அறிவுறுத்துகிறார். |
| மோசமான சகவாசம், நட்பு | வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைத்தால் கெட்டவர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். கெட்ட சகவாசம் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று எச்சரிக்கிறார். |
| பண்பு இல்லாத இடத்தில் | நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாதவன் மிருகத்தைப் போன்றவன் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே, நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாத வீடுகளில் ஒருவர் தங்கக்கூடாது என்று வலியுறுத்துகிறார். |
| வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில் | வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார். வருமானம் நல்ல வேலைவாய்ப்பிலிருந்து வருகிறது. எனவே, வேலை வாய்ப்புகள் இல்லாத இடத்திற்கு ஒருபோதும் இருக்காதீர்கள் என்று கூறுகிறார். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |