சமூக சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாத நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சமூகத்தின் மீது அதிக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இவர்கள் சமூகத்தின் நலனுக்கான தங்களின் ஆசைகளை கூட தியாகம் செய்ய தயாராக இருப்பார்களாம். அப்படி சமூகத்துக்கு சேவை செய்யவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

அன்பு மற்றும் அழகின் கிரகமாக கருதப்படும் சுக்கிரனின் ஆதிபக்கத்தில் பிறந்த கடக ராசிக்காரர்கள் அவர்களின் தன்னலமற்ற இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் அன்பான இதயமும், சக்திவாய்ந்த உள்ளுணர்வும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவித்துக்கொண்டே இருக்கும்.
அவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் தேவைகளைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டிருப்பதால், மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் சமூக பணிக்காக ஆர்வத்தில் துளியும் சுயநலம் இருக்காது.
துலாம்

அன்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு பெயர் பெற்ற துலாம் ராசியினரும் இயல்பாகவே இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சமூகத்தில் சமநிலையையும், நீதியையும் ஏற்படுத்தும் நோக்கில் வாழ்க்கை முழுவதும் உண்மையாக போராடுவார்கள்.
அவர்களின் இயல்பான ராஜதந்திர உணர்வு மற்றும் நீதி உணர்வு, சமூக நலனுக்காக யாரை வேண்டுமானாலும் பகைத்துக்கொள்ள தயாராகிவிடும்.
தனுசு

சாகச குணத்துக்கும் சுதந்திர உணர்வுக்கும் பெயர் பெற்ற தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் சமூக பணிகளில் ஈடுபடுவதையும் மற்றவர்களின் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் பற்றி அறிந்துக்கொள்வதிலும் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களை ஆராயவதில் இவர்களுக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகமாக இருக்கும்.
மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்களின் இந்த குணங்கள் அவர்களை சிறந்த சமூகப்பணியாளராக மாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |