மனோபாலா இறப்புக்கு முன்னர் கடைசியாக வெளியான காணொளி!
தற்போது மனோபாலா இறப்பு செய்தி வெளியாவதற்கு முன்னர் அவரின் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோக்காட்சி வெளியாகியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகருமாக வலம் வந்தவர் தான் நடிகர் மனோபாலா. இவருக்கு தற்போது 69 வயது தான் ஆகிறது.
இவர் தாய்மாமன், தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால் உட்பட 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் மனோபாலா நடித்துள்ளார்.
அதுவும் ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா’ படத்திலும் தன்னுடைய நகைச்சுவையால் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில், உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடைசியாக வெளியிட்ட காட்சி
Like,share,subscribe my youtube channel ?@MBWastePaperhttps://t.co/DImYoc230g
— Manobala (@manobalam) July 8, 2020
தற்போது இவரின் உடல் நிலை மோசமாகி உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் மனோபாலாவிற்கு உடலில் ஏற்பட்ட சில கோளாறுகள் தான் காரணம் எனவும் குறித்த செய்திகள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இவரின் டுவிட்டர் பக்கத்தில் சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு முன்னர் நடிகை கோவை சரளாவுடன் பேட்டியெடுக்கும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
அதில் பார்க்கும் போதே அவரின் உடல் நிலை மோசமாக இருப்பது போல் இருக்கிறது என ரசிகர்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.