Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்?
தம்பதிகளை வைத்து மருமகள்களை அடக்கத் திட்டம் போட்ட குணசேகரன், முதல் அடியாக ஜனனியை மனம் மாற்றுமாறு சக்தியிடம் கூறி அனுப்புகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது.
ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
இப்படி பல பிரச்சினை வீட்டில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, குணசேகரனுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனால் வீட்டில் மறுபடியும் குழப்பங்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன.
பெரிய பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு எப்படியாவது விஷேசம் வைத்து விட வேண்டும் என நந்தினி ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கதிரிடம் பேசி அவரை மனதை குணசேகரன் மாற்றியுள்ளார்.
ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்
இந்த நிலையில், குணசேகரன் வீட்டிற்குள் வரும் பொழுது பெண்கள் யாரும் தடையாக இருக்கக் கூடாது என புதிய திட்டம் போட்ட குணசேகரன் தங்களின் தம்பிகளை வைத்து திட்டத்தை நடத்துகிறார்.
அவரின் வலையில் இருக்கும் சக்தி, ஜனனியிடம் பேசி,“நீ செய்வது தவறு.. இனியும் அப்படி பிடிவாதம் வேண்டாம்..” எனக் கூறுகிறார். ஜனனியும் சக்தி அன்பாக கூறுவதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருக்கிறார். அத்துடன் ரேணுகா, நந்தினி இருவரும் நடுசாமத்தில் எழுந்து, அறையை விட்டு வெளியில் வந்து தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஞானத்திற்கும் என்ன நடக்கிறது என சரியாக புரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் விஷேசத்தில் குணசேகரனின் ஆட்டம் எப்படி இருக்கும்? என்பதனை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் இந்த தடவை பெண்கள் வெளியேறினால் பிரச்சினை வரும் என புரிந்து கொண்ட குணசேகரன் என்ன செய்வார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |