பூனையை கைது செய்த போலிசார்.... கெஞ்சிய ஓனர்! செய்த தவறு என்ன தெரியுமா?
தாய்லாந்து நாட்டில் போலிசாரைத் தாக்கிய பூனை ஒன்றினை கைது செய்துள்ள நிலையில், அதன் ஓனர் கெஞ்சி ஜாமீனில் எடுத்துள்ளார்.
பூனையை கைது செய்த போலிசார்
தாய்லாந்து நாட்டில் பாங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றினை நுப் டாங் என்று பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பூனை காணாமல் போயுள்ள நிலையில், உரிமையாளர் அதனை தேடியும் அலைந்துள்ளார்.
பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காணாமல் போன பூனை நுப் டாங் பல இடங்களில் பயணித்து பூங்கா ஒன்றில் இருந்துள்ளது.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த அந்த பூனை ஆதரவின்றி நின்றிருந்ததைப் பார்த்த போலிசார் அதனை தூக்குவதற்கு அருகில் சென்ற போது நகத்தால் பிறாண்டி போலிசாரை தாக்கியுள்ளது.
இதனால் பூனை மீது வழக்கு பதில் செய்த போலிசார் அதனை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைதான பூனையின் புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, பூனை உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ளவும் கூறியுள்ளனர்.
அழகான அந்த பூனையை அவதானித்த பெரும்பாலான நபர்கள் பூனையின் உரிமையாளர் வரவில்லை என்றாலும், அதனை தாங்களே தத்தெடுத்துக் கொள்வதாக போலிசாரிடம் கெஞ்சியுள்ளனர்.
இதற்கு போலிசார் மறுத்துவிட்ட நிலையில், நுப் டாங் கைதானது உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. பின்பு அவர் போலிசாரிடம் கெஞ்சி தனது பூனையை ஜாமீனில் எடுத்துச் சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |