உக்கிர சனியில் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்கும் மிகவும் எச்சரிக்கை... மறந்தும் கூட இதை செய்துவிடாதீர்கள்
2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழவுள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவோ, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது.
முந்திரியில் கொலஸ்ட்ரால் இருக்காம்...ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் தெரியுமா?
இந்த கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது. இந்த நாளில் சனிபகவானை வழிபடுவது ஏழரை சனி மற்றும் சனி தசையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
கிரகங்களின் நிலை காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை தினங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகணத்தின் போது இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடவும். அதிக கவனமாகவும் இருக்கவும்.
பரிகாரம்
கடக ராசியின் ஆட்சி நாதன் சந்திரன் சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் பயணம் செய்யும் போது கிரகணம் ஏற்படுகிறது.
எனவே இந்த ராசிக்காரர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சூரிய கிரகணத்தின் போது தோஷம் ஏற்படும்.
எனவே இன்றைய தினம் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த மூன்று ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
கிரகண நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலுக்கும் 100 மடங்கு நற்பலன் கிடைக்கும்.
அதனால் கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு, தியானம், மந்திரங்களை உச்சரித்தல் போன்ற செயல்களைச் செய்ய வேண்டும்.
இன்று சனிப்பெயர்ச்சி! 12 ராசிகளில் அதிர்ஷ்டசாலி யார்? சுருக்கமான பலன் இதோ
கிரகண நேரத்தில் எந்த ஒரு புண்ணிய காரியம் செய்தாலும் கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
எனவே, சூரிய கிரகண நேரத்தில், அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு, ஜப-தபங்கள் மற்றும் தியானம் செய்ய வேண்டும். மேலும், கிரகணம் முடிந்து குளித்த பின், சில தர்மங்களையும் செய்ய வேண்டும்.
சனி அமாவாசையுடன் ஆண்டின் முதல் சூர்ய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
இதை மறந்தும் செய்துவிடாதீர்கள்
- கிரகண நேரத்தில் மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
- வீடாக இருந்தாலும், பணியிடமாக இருந்தாலும் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
- கிரகண நேரத்தில் சச்சரவுகளில் ஈடுபடுவதால், உங்கள் வாழ்க்கையில் அதே போன்ற தருணங்கள் தொடரும்.