தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வரவே வராது
நாம் தினமும் விரும்பி உண்ணும் காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. இதனை வயது வித்தியாசம் இன்றி யார்வேண்டுமானாலும் பச்சையாகவே சாப்பிடலாம்.
கேரட்டில் அதிகமான ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்து இருக்கிறது மேலும் இதில் வைட்டமின் சி, பி3, கே பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற மினரல்களும் அதிகளவாக இருக்கிறது.
அதனால் இந்த கேரட்டை தினமும் பச்சையாகவும், சமைத்தும் அல்லது ஜூஸ் செய்தும் குடித்தால் அனைத்துமே ஆரோக்கியத்தை மட்டும் தான் கொடுக்கும்.
கேரட் ஜூஸ் செய்வது எப்படி?
தேவையான அளவு கேரட்டை எடுத்து தோலை நன்றாக சீவி கழுவிக் கொள்ளவும்.
பிறகு கேரட்டை நறுக்கிக் கொண்டு மிக்சியில் போட்டு தேவையான அளவி சக்கரை சேர்த்து ஐஸ் கியூப் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஜூஸ் அரைத்தப்பின்னர் தேவையாயின் அதனை வடிகட்டி குடிக்கலாம்.
கேரட் ஜூஸின் நன்மைகள்
- தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் பளபளப்பாக மாறும்.
- எலும்புகள் வலுவடைந்து உறுதி அதிகரிக்கும்.
- பக்கவாதம் அபாயத்தைக் குறைக்கும்
- ரத்தத்தில் இருக்கும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும்.
- கல்லீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்
- ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
- உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும்
- செரிமானத்தை தூண்டி வயிறுக்கோளறுகளை சரி செய்யும்.
- தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் கண்பார்வை மேம்படும்.
- புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தும்
- உடலில் உள்ள கழிவுகளை வெளியயேற்றி உடல் எடையைக் குறைக்கும்
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- சக்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
- இதயத்திற்கு நன்மையை கொடுக்கும்
- பல், ஈறு பலம் பெறும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |