வாரத்திற்கு 3 முறை ஒரு கப் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? செய்து பாருங்க
நார்ச்சத்த்துக்கள் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
ஏனெனின் இந்த தாவரங்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் கண் தொடர்பான பிரச்சினைகள், வயிறு தொடர்பான பிரச்சினைகள் என்பன நிரந்தரமாக குணமாக்கப்படுகிறது.
அந்தவகை உணவுகளில் ஒன்று தான் கேரட். இதனை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதன் மூலம் தான் அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
இதனை தொடர்ந்து கேரட்டினால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
கேரட்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்
கேரட்டில் அதிகமாக வைட்டமின் A இருக்கிறது. இது கண்களின் பார்வை கூர்மைப்படுத்தி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் ஜிமிற்கு செல்லுபவர்களும் கேரட்டை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனின் இதில் அதிகமான கலோரிகள் இருக்கிறது.
புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதில் கேரட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இவற்றை அன்றாட சாப்பிட்டு வருவதால் புற்றுநோய்க்கான செல்கள் தோன்றுவதை தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேரட் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனின் கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
மேலும் கொழுப்பு உட்ம்பில் படிய விடாமல் தடுக்கிறது. கொலஸ்ட்ரோல் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் ஒரு கப் அளவு கேரட் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு காலப்போக்கில் குறையும்.
கேரட்டை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் விட்டு சமைத்தால் அதன் சத்துக்களை அழிவடையாமல் இருக்கும்.
கேரட்டை தினமும் எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் மினவும் பளபளப்பாக இருப்பார்கள். காரணம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் மாலைக்கண் நோய் வரவிடாமல் தடுக்கிறது.