இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ராஸ்பெர்ரி பழம் - நன்மைகள் என்னென்ன?
ராஸ்பெர்ரி பழமானது இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், இவை நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி கண் சவ்வுகளை சுத்தம் செய்வதன் மூலம் கண் உலர்வில் இருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நோய்த்தொற்று விகிதத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இந்த பழம் ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை பழம் ஆகும்.
அங்கிருந்து இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் விரைவில் வட அமெரிக்கா வரை பரவியது. ராஸ்பெர்ரி உற்பதியில் உலக அளவில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக மெக்ஸிகோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் உள்ளன.
ராஸ்பெர்ரி பழம் நன்மைகள்
ராஸ்பெர்ரி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரியான விகிதத்தில் உள்ளன.
இதில் ஃபிளாவனாய்டுகள் மூளை யின் வலிமையை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. ராஸ்பெர்ரி பழங்களை தொடர்ந்து சா ப்பிடுவதன் மூலம் மூளையின் செயல் பாட்டை மேம்படுத்து வதோடு, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும், ராஸ்பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது இதய நோய்களைக் குறைத்து இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பைட்டோநியூட்ரியண்ட்கள் இதய தமனிகளில் உள்ள அடைப்பு களை நீக்க உதவுகிறது.
நீரிழிவு
ராஸ்பெர்ரி பழத்தில் பைட்டோ நியூட்ரியண்டுகளின் சிறந்த மூலமாகும். இது சில ஹார் மோன்களுடன் இணைந்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, ராஸ்பெர்ரிகளை திட அல்லது சாறு வடிவத்தில் தொடர்ந்து உட்கொள்வது டைப் -2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
புற்றுநோயை தடுக்கும்
ராஸ்பெரி பழம் புற்றுநோயை ஏற்படுத்தும் உயிரணுக்களுக்கு எதிராக போராடுவதாக சொல்லப்படுகிறது.
இதில், உள்ள எலாஜிக் அமிலம் தோல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான காரணிகளை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமையானது.
மேலும், ராஸ்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்று நோய் ஏற்படுத்தும் உயிரணுக்களின் பரவலைக் குறைக்கவும் உதவுகின்றன.
கண் பார்வை
இந்த பழத்தில், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினாலிக் கலவைகள் உள்ளன. அவை கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது. மற்றும் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
பாலியல் ஆரோக்கியம்
ராஸ்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் கருவுறுதலை மேம்படுத்துவதற்கும் பாலியல் ஆரோக்கியத்தை, மேம்படுத்து வதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும், ஆக்ஸிஜனேற்றிகள் விந்தணுக் களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதனால் மேம்பட்ட பாலியல் வாழ்க்கையை உறுதி செய்கிறது.
எடை இழப்பு
இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச் சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
மெக்னீசியம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பை வேகமாக எரிக்கிறது.
நினைவாற்றல்
ராஸ்பெர்ரி பழங்களில் உள்ள் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் நினைவகத்தை மேம்படுத்து கிறதுஆற்றல் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
ஒவ்வாமையை போக்கும்
சிலருக்கு வெளியில் சாப்பிடும் போது அல்லது வெந்தயம், பூண்டு போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படும்.
அதற்கு சாப்பிட்ட பிறகு ஒரு கப் ராஸ்பெர்ரி பழம் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கும்.
மூட்டு வலியை போக்கும்
இளைய தலைமுறையினரே மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு தீர்வு தரும் அந்தொசையணின்ஸ் எனும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ராஸ்பெர்ரி பழத்தில் அதிகமாக இருக்கிறது.
இவை உடலில் உள்ள செல்களில் தீங்கு ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. மேலும் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித பிரச்சனை வந்தாலும் எதிர்த்து போராடும்.
மேலும் எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்றவைகள் வராமல் தடுக்கிறது. இதனால் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கிறது.
காய்ச்சல் குறைய
கடுமையாக காய்ச்சல் இருக்கும் பொழுது ராஸ்பெர்ரி பழச்சாற்றை அருந்தினால் உடலில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.