தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள்

Cholestrol Eye Problems Carrot Indigestion
By Fathima Apr 25, 2022 10:14 AM GMT
Report

இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட அன்றாடம் கிடைக்கக்கூடிய விலை மலிவான அதேசயம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று கேரட்.

நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் ஒருங்கே கொடுக்கக்கூடியது கேரட்,  இதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கேரட்டை முழுமையாக சாப்பிடுவது நம்முடைய உடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

உங்களது கண்பார்வையை மேம்படுத்துவதில் தொடங்கி புற்றுநோய் செல்களை அழித்தல், இதய நோய்களை தடுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனையையும் அதிகப்படுத்துகிறது.

கண்களுக்கு சிறந்தது

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என பலரும் சொல்லக்கேட்டிருப்போம், இதற்கு காரணம் இதிலுள்ள பீட்டா கரோட்டின் தான்.

விட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

இதுதவிர Lutein மற்றும் Zeaxanthin போன்ற கரோட்டினாய்டுகள் கண் பார்வை திறனை மேம்படுத்துவதுடன் கண்புரை மற்றும் பார்வை இழப்பு போன்ற கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.

வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். 

பலரும் வேண்டாமென ஒதுக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் இத்தனை பயன்களா? 

உடல் எடையை குறைக்க

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ள கேரட்டை தாராளமாக அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் கேரட்டை எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளுடன் ஒப்பிடுகையில் கேரட் சாப்பிடும் போது வெகு சீக்கிரமாகவே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும், இரவுநேரம் பசியால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் சிறந்த தேர்வாக இருக்கிறது.

ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்? ஈஸியான வழிகள் இதோ 

குடல் ஆரோக்கியத்திற்கு

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

கேரட்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானம் எளிதாக நடைபெற உதவுவதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பாக இதில் கரையும் மற்றும் கரையாக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நன்மை தரும் பக்டீரியக்களின் செயல்பாடுகளை தூண்டுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் தொடர்ந்து கேரட்டை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

வாயு தொல்லையால் பெரும் அவதியா? அப்ப இந்த கஞ்சியை குடிங்க போதும் 

நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

கேரட்டில் அதிகம் நிறைந்துள்ள விட்டமின் ஏ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, இவை ரத்த வெள்ளை அணுக்கள் அதாவது T-செல்களுக்கு உதவிபுரிகிறது.

கிருமித்தாக்கத்தில் இருந்து எதிர்த்து போராட இந்த செல்கள் வலுவுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் இதிலுள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு பண்புகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது.

வெயில்கால நோய்களை விரட்டி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டுமா? 

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

கேரட்டில் GIன் அளவு குறைவு, எனவே சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரெட், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் கேரட் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்பதால் சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம்.

மேலும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் செயல்பாடுகள் சீராக நடைபெற உதவிபுரிகின்றன.

சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடவே வேண்டாம்! 

ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

Carotenoids மற்றும் Anthocyanins என்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் கேரட்டில் அதிகம் நிறைந்துள்ளன, இவைகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இவை அவசியம் என்பதால் தினமும் கேரட் சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.

பல நோய்களுக்கு அருமருந்தான திரிபலா சூரணம்! எப்போது எப்படி சாப்பிட வேண்டும்? 

கொலஸ்ட்ராலை குறைக்கும்

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

கேரட்டில் அதிகம் நிறைந்துள்ள கரையும் நார்ச்சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் கொலஸ்ட்ராலை குறைக்கும், இதனால் ரத்தத்தில் LDL கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.

கொலஸ்ட்ரால் அதிகமாகும் பட்சத்தில் இதயம் தொடர்பான நோய்கள் நம்மை பயமுறுத்தும், எனவே தினமும் கேரட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.

எனவே தான் இதய நோயால் அவதிப்படும் நபர்கள் தினமும் சிறிதளவு கேரட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

கெட்ட கொழுப்பை வேகமாக வெளியேற்றனுமா? 

அழகான முடி மற்றும் சரும பாதுகாப்பிற்கு

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

தினமும் கேரட்டை உட்கொண்டு வந்தால், பொலிவான சருமம் மற்றும் ஆரோக்கியமான முடியினை பெறலாம்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பீட்டா கரோட்டின்கள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது தோலை பாதுகாக்கிறது.

குறிப்பாக விட்டமின் இ, வயதான தோற்றம் ஏற்படாமல் முதுமையை தள்ளிப்போடுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

முகத்தை பளிங்கு மாதிரி வைத்து கொள்ள வேண்டுமா? கொத்தமல்லியை இப்படி பயன்படுத்துங்க 

எதனுடன் கலந்து சாப்பிடலாம்?

* கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

* பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

* கேரட்டை அரைத்து ஜுஸாகக் குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி இருப்பவர்களுக்கு மருந்தாகும்.

* ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

* சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

* புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.

* கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும்.

* கேரட் சாறுடன் இஞ்சி சாறு சேர்ந்து குடித்தால் உடல் எடையை குறைக்கலாம், வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் நல்ல பலனை தரும்.

குறிப்பு

வேகவைத்த கேரட்டுகளை விட, வேகவைக்காமல் அப்படியே கேரட்டுகளை சாப்பிட்டால் முழு பலனை பெறலாம், நார்ச்சத்தும் முழுமையாக கிடைக்கும்.

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் | Carrot Benefits In Tamil

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US