ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை மணந்த நடிகை மிர்னாலினி ரவி! வைரலாகும் புகைப்படங்கள்
Actress Mirnalini Ravi Ties the Knot with Mahavishnu in a Grand Wedding in Malaysia : நடிகை மிர்னாலினி ரவி, தனது நீண்டகால காதலரும் ஆன்மீகப் பேச்சாளருமான மகாவிஷ்ணுவை மலேசியாவின் அழகிய தீவுப் பகுதியான லங்காவியில் (Langkawi) நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.
குறித்த புகைப்படங்களை அவர் தற்போது வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்த வருகின்றனர்.

நடிகை மிர்னாலினி ரவி
தமிழ் சினிமாவில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தனது அழகான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான திரை ஆளுமையால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை மிர்னாலினி ரவி.
குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான இவர், திரையுலகில் அறிமுகமான பிறகும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

இந்நிலையில், மிர்னாலினி ரவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. தனது காதலர் யார் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
ஆன்மீகப் பேச்சாளரான மகாவிஷ்ணுவைத்தான் மிர்னாலினி காதலித்து வந்ததாகத் தெரிவித்திருந்தார்.இதையடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தற்போது மிர்னாலினி ரவி தனது காதலருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். மலேசியாவின் அழகிய தீவுப் பகுதியான லங்காவியில் (Langkawi) நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

தனது திருமணத்தின் அழகிய புகைப்படங்களை மிர்னாலினி ரவி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் எனப் பலரும் புதுமணத் தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |