மீன ராசியில் சனிபகவான்... சிக்கலில் சிக்கித்தவிக்கும் ராசிகள் யார்?
சனிபகவான் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்ஃ
சனி பகவான்
ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படும் சனி பகவானின், ஒவ்வொரு செயல்களக்கு ஏற்ப தண்டனை மற்றும் நல்ல பலன்கனை அளிப்பார்.
சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும் நிலையில், இதன் இயக்கம் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
அந்த வகையில் டிசம்பர் 11ம் தேதி மீன ராசியில் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து நேரடி இயக்கத்தை தொடங்கப் போகும் நிலையில், ஜுன் 2027 வரை இதே நிலையில் நீடிக்கின்றார்.
இதனால் சில ராசியினருக்கு சாதகமான பலனைப் பெறுவதுடன், எதிர்மறையான பலனை பெறும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு சனிபகவான் சோதனையான காலத்தினை கொடுக்கும் நிலையில், அனைத்து காரியத்திலும் தாமதத்தினை சந்திக்க நேரிடும்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பதற்கு அதிகமாக போராட வேண்டியுள்ளது. அலுவலகத்தில் கவனமாக இருக்கவில்லையென்றால் வீண் பழிகளுக்கு ஆளாவீர்கள்.
நிதி இழப்புகளால் சேமிப்பு கடுமையாக பாதிப்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களளை ஏற்படுத்துமாம். தனிப்பட்ட விடயத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.
வணிக ரீதியாகவும் கவனம் தேவை. எதிர்பார்த்த லாபங்கள் நஷ்டமாகவும் மாற வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியினருக்கு சனிபகவானின் நேரடி இயக்கத்தினால் இந்த காலக்கட்டத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். நினைத்த காரியங்கள் எதுவும் நடைபெறாமல் தாமதமாகும். திருமண வாழ்க்கையிலும் கூட பிரச்சனைகள் ஏற்படலாம்.
அலுவலக வேலையில் இருப்பவர்கள் வேலையினை மிகவும் கவனமாக செய்வது நல்லது. ஏனெனில் பல சிக்கல்கள் ஏற்படலாம்.
வியாபாரிகளும் இக்காலக்கட்டத்தில் கவனமாக இல்லையெனில், மிகப்பெரிய நஷ்டத்தினை சந்திக்க நேரிடுமாம். நஷ்டம், தோல்வி இவற்றினை சந்திக்கும் காலமாக இருப்பதால், கவனமாக செயல்படவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு எதிர்மறையான பலன் கிடைப்பதுடன், தொழிலில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் இருப்பதுடன், வேலையை மாற்ற நினைப்பவர்கள் தற்போது மாறுவது கூடாது.
முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் பிரச்சனையை தவிர்க்க கவனம் செயல்படவும்.
வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது உறவுகளில் நம்பிக்கையை காப்பாற்ற உதவுவதுடன், வணிக ஒப்பந்தங்கள் இழப்பினை ஏற்படுத்தலாம். ஆதலால் எந்தவொரு கடின முயற்சியும் எடுக்க வேண்டாம்.
உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |