தினமும் 2 ஏலக்காய் மட்டும் சாப்பிடுங்க! உடலில் பல மாற்றத்தினை காணலாம்
ஏலக்காய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஏலக்காய்
நமது சமையலில் தினமும் பலவித மசாலா பொருட்களை பயன்படுத்தும் நிலையில், இவை உணவின் சுவையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.
மசாலாப் பொருட்கள் பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்று ஏலக்காய்.
ஏலக்காயை நாம் பல வகையான உணவுகளில், குறிப்பாக இனிப்பு வகை உணவுகளில் பயன்படுத்துகிறோம். ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, பல உடல்நலப் பிரச்சினைகளையும் நீக்குகின்றன.
நன்மைகள் என்ன?
ஏலக்காயில் உள்ள தனிமங்கள் செரிமான நொதியை அதிகரிக்கவும், உணவை ஜீரணமாக்கவும் உதவுகின்றது. சாப்பிட்ட பின்பு ஏற்படும் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.
வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகின்றது. ஏலக்காயை வாய் புத்துணர்ச்சியூட்டவும் உட்கொள்ளலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுவதோடு, வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
ஏலக்காயில் உள்ள சில கூறுகள் மன அழுத்தத்தை குறைப்பதுடன், செரோடோனின் அளவை அதிகரிக்க செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மனநிலையை மேம்படுத்த உதவும் ஒரு வகையான நரம்பியக்கடத்தியாகும். மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்பு 2 ஏலக்காயை எடுத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவும் சேர்மங்கள் ஏலக்காயில் அதிகமாக உள்ளது. அதாவது ஏலக்காய் பொடி புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் சில நொதிகளில் செயல்பாட்டை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |