வெறும் வயிற்றில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிங்க... உடலில் ஏற்படும் மாற்றங்கள்
வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜுஸ் அருந்துவதால் உடலில் தோன்றும் மாற்றத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பீட்ரூட்
காய்கறிகளில் அனைத்திலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. அதில் ஒன்று தான் பீட்ரூட். பீட்ரூட்டில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.
இவை உடலை டிடாக் செய்வது முதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை அனைத்து நன்மைகளையும் அளிக்கின்றது.
இவ்வாறு எண்ணற்ற நன்மையைக் கொண்ட பீட்ரூட் ஜுஸை வெறும் வயிற்றில் அருந்துவதால் உடலில் பல மாற்றங்களை நம்மால் காண முடியும்.
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பானங்கள் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும் என உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நன்மைகள் என்ன?
பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ள நிலையில், உடலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை இளமையாக வைக்கின்றது. மேலும் சருமத்தில் சுருக்கங்கள் நீங்குவதுடன், மாசு மருக்களை அகற்றவும் செய்கின்றது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள், மூளையை தூண்டி நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டது. தினமும் அருந்துவதால், நினைவாற்றல் பெருகுவதுடன், மறதி நோய் டொனேஷியா போன்ற பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.
பொதுவாக செரிமானம் சிறப்பாக இருந்தாலே பலவிதமான நோய் பாதிப்புகளை தவிர்த்து விடலாம். மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை பீட்ரூட் ஜுஸ் தவிர்க்கின்றது.
கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட பானமாக பீட்ரூட் ஜுஸ் இருக்கின்றது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தை பீட்ரூட் ஜுஸ் குறைக்கின்றது. ஏனெனில் இது கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது.
கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கவும் பீட்ரூட் ஜுஸ் உதவுகின்றது. கொழுப்பு கல்லீரலுக்கும் தீர்வை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |