capsicum chutney: மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை தீர்வு கொடுக்கும் குடைமிளகாய் சட்னி...
சைனீஸ் வகை உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குடைமிளகாயில் ஏறாளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் செறிந்து காணப்படுவதாால், வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.
கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் வாய்புண் பிரச்சினையை குடைமிளகாய் விரைவில் குணப்படுத்த உதவுகின்றது.
மேலும் பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தவும் குடைமிளகாய் பெரிதும் துணைப்புரிகின்றது.
குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.
குடைமிளகாய் உடலில் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால்,உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட குடைமிளகாயை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் குடைமிளகாய் சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 2 தே.கரண்டி
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
குடைமிளகாய் - 1
பூண்டு - 2 பல்
புளி - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூமானதும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் சிறிய துண்டு புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி, குளிரவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வதக்கிய மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், அவ்வளவு தான், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த குடைமிளகாய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |