heat stroke symptoms: உயிராபத்தை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக்... அறிகுறிகள் எப்படி இருக்கும்?
தற்காலத்தில் வெப்ப பக்கவாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் குறித்த ஆபத்தும், அச்சமும் பெரும்பாலானவர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
பொதுவாக உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் உயரும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன, அதன் ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான முழுமையான விளக்கத்தையும், ஹீட் ஸ்ட்ரோகின் போது உயிராபத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?
ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை ஆக அறியப்படுகின்றது. இது உடலின் மைய வெப்பநிலை சாதாரண அளவை விட (பொதுவாக 104 ° F அல்லது 40 ° C க்கு மேல்) அதிக வெப்பநிலை அல்லது சூடான மற்றும் ஈரப்பதமான நிலையில் உடல் உழைப்பு காரணமாக ஏற்படும் ஒரு உடல் நிலை பாதிப்பாகும்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் போது, உடல் வெப்பநிலை வேகமாக உயரும். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால், உடல் வெப்பநிலை 10 முதல் 15 நிமிடங்களுக்குள் 106°F அல்லது அதற்கும் அதிமாக கூட விரைவாக உயரும்.
இவ்வாறு ஏற்படும் போது உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
பொதுவாக அதிக வெப்பநிலை இருக்கும் போது அல்லது நீண்ட நேரம் கடுமையான வெயிலில் உடல் உழைப்பை வழங்கும் சந்தர்ப்பங்களில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
உங்கள் உடல் வெப்பநிலை 104 F (40 டிகிரி செல்ஸியஸ்) அல்லது அதற்கும் அதிகமாக உயர்ந்தால், வெப்ப பக்கவாதம் எனப்படும் மிகத் தீவிரமான பாதிப்பால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. இது திடீர் என நிகழும் ஒரு பாதிப்பாக இருப்பதால் இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் சந்தர்ப்பங்கள்
பொதுவான கோடை மாதங்களில் சூழல் வெப்பநிலை தீவிரமாக உயரும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிக்கின்றது.
ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு ஏற்பட்டால் அவசர சிகிச்சை தேவைப்படும். சிகிச்சையளிக்கப்படாத போது உங்கள் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் தசைகளை விரைவாக சேதமடைந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் உதவி
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவரை முதலில் நிழலான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஈரமான துணி மூலம் உடலை துடைக்கலாம். அல்லது குளிர்ந்த நீரை உடலில் தெளிப்பதன் மூலம் வெப்பத்தை தணிக்க முயற்சி செய்யலாம்.
வியர்வை மூலம் உடலில் உப்பு சத்து விரைவாக இழக்கப்படுவதால், குளிர்பானங்கள் மற்றும் இழந்த உப்பை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க கொடுப்பது சிறந்தது.
ஹீட் ஸ்ட்ரோக் தடுப்பு நடவடிக்கைகள்
கோடை காலங்களில் அதிக நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி முகம், கை.கால்கள் கழுவிக் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் நைலான், பாலிஸ்டர் போன்ற துணிகளால் செய்த உடைகளை தவிர்த்து பருத்தி உடைகளை அணிவது சிறப்பு.
உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். குறிப்பாக மண் பானையில் வெட்டிவேர் போட்டு மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கும் போது உடல் விரைவில் குளிர்ச்சியடையும்.
வெயில் காலங்களில் அவ்வப்போது மோர், இளநீர், நுங்கு, பதநீர், போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் கோடை காலத்தில் காரமான உணவுகள், அத்துடன் கோழி, நண்டு, இறால் போன்ற உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது.
எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டு குடிப்பது ஹீட் ஸ்ட்ரோக் வராமல் உடலை பாதுகாக்கின்றது.
சூழல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது ஹீட் ஸ்ட்ரோக் வராமல் உடலை பாதுகாத்துக்கொள்ள பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |