42 வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்... நடிகை ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண் 42 வயதிலும் அதே இளமையுடனும் பொலிவுடனும் இருப்பதற்கு என்னென்ன வாழ்க்கை முறை பழக்கங்களை கடைப்பிடிக்கிறார் என்பது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுன்ள நேர்காலில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா சரண்
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் டாப் ஹீரோயினாக ஜொலித்து வந்தவர் தான் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
பட வாய்ப்புகள் குறை ஆரம்பித்ததும் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றார்.
தற்போது 42 வயதாகும் இவர் ஒரு குழந்தைக்கு தயாக இருக்கும் போதும் கூட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒல்லியான உடலுடன் என்றும் இளமையாக இருந்து வருகின்றார். அது குறித்து இவர் குறிப்பிடுகையில்,
"எனக்கு எல்லா வடிவங்களிலும் இயக்கம் பிடிக்கும், அதனால் என் உடற்பயிற்சிகளை உற்சாகமாக வைத்திருக்க நடன இயக்கங்களையும் அதனுடன் கலந்து கொள்கிறேன் என ஷ்ரியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யோகா நெகிழ்வுத்தன்மை, தோரணை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதால் பல ஆண்டுகளாக தனது வழக்கமான வாழ்க்கை முறையில் யோகா கலை கலந்திருக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.
இவரின் நெகிழ்வு தன்மைக்கும் இளமை பொலிவுக்கும் சுறுசுறுப்புக்கு நீச்சல் பயிற்ச்சி பெரிதும் துணைப்புரிவதாகவும் குறிப்பிடுகின்றார்.
பயிற்சிக்கு முன் என்ன சாப்பிடுகிறார்?
"உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிடுவது மிகவும் அவசியம், நான் மிகவும் நிரம்பியதாக உணராமல் போதுமான ஆற்றலைப் பெறும் வகையில் சாப்பிடுகிறேன்.
உடற் பயிற்சிக்கு முன்னர் வாழைப்பழத்துடன் ஒரு கைப்பிடியளவு பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளாராம்.புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உட்பட 15 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பாதாம் உடலுக்கு வழங்குகின்றது.
அதே நேரத்தில் வாழைப்பழங்கள் விரைவான கார்போஹைட்ரேட் ஊக்கத்தை கொடுக்கின்றது. அதனால் அவற்றை கட்டாயம் சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒரு வொர்க்அவுட்டிற்குப் பிறகு, நான் என் உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதிலும் கவனம் செலுவாராம். காய்கறிகள் அல்லது முழு தானிய வகைகளுடன் முட்டையை நிச்சயம் எடுத்துக்கொள்வாராம்.
இந்த உணவுகளுடன், நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமானளவு தண்ணீர் பருகுவதுடன் அவ்வப்போது, எலக்ட்ரோலைட்களை மீட்டெடுக்க தேங்காய் நீரை எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரேயா சரண் தன்னுடைய சருமத்தைப் பராமரிப்பதற்காக நம்பகமான மருத்துவரை அணுகி உரியச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார். இதன் மூலம், அவரது சருமம் எப்போதும் பராமரிக்கப்படும் அழகான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெறுகிறது என குறிப்பி்ட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |