பாம்பு பாம்பையே விழுங்கும் திகில் சம்பவம்! வைரல் புகைப்படம்
ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள கடற்கரையில் டுகைட் பாம்பு தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு பாம்பை விழுங்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அதிக விஷம் கொண்ட பாம்பு
ஆஸ்திரேலியா நாட்டில் மேற்குப் பகுதியில் பின்னிங்அப் கடற்கரைக்கு, போடி கிரீன் என்பவர் சென்ற நிலையில், அங்கு தான் இந்த வினோதமான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாம்புகள் பின்னிப்பிணைந்து இருப்பதை அவதானித்த குறித்த நபர், இனச்சேர்க்கையில் இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால் சிறுதி நேரம் கழித்து நன்றாக பார்த்த போது, ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கியுள்ளது.
பின்பு இதனை செல்போனில் படம் பிடித்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த பாம்புகள், இரண்டும் டுகைட் என்னும் வகையைச் சேர்ந்த கொடிய நச்சுப் பாம்புகள் என்றும், இது தனது இனத்தையே அழித்து சாப்பிடக் கூடியது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பாம்புகள் தனது இரையைக் கொத்தி செயலிழக்கச் செய்தபின் அதன் உடலில் சுற்றி நெருக்கிக் கொன்று, பின்பு உடலை விழுங்கிவிடும் என்பதை கூறியுள்ளார்.
மிகவும் பெரிதாக வளரக்கூடிய இந்த நச்சுத்தன்மை கொண்ட பாம்பு, மனிதர்களும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக கூறப்படுகின்றது.