காளான் நல்லது தான்.. ஆனால் இந்த பக்கவிளைவுகளும் உண்டு
புரதச்சத்து அதிகம் நிறைந்த காளான்களை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து மற்றும் வைட்டமின்கள் என உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
நன்மைகள் என்னென்ன?
- கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
- மூட்டு வலி, வாதம் மற்றும் மலட்டுத்தன்மைக்கு சிறந்த வலி நிவாரணி.
- கருப்பை நோய்களிலிருந்து பெண்களை காக்கிறது.
- மலச்சிக்கலை தவிர்ப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
உங்கள் வீட்டு பக்கத்திலேயே 10 நோய்களை விரட்டியடிக்கும் மருந்து கீரை
நல்ல காளான்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், உறுதியாக இருக்கும் காளான்களை தேர்ந்தெடுங்கள்.
நடுத்தர அல்லது பெரிய அளவில் காளான்கள் இருக்க வேண்டும், முதலில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காளான்களை அன்றைய தினமே பயன்படுத்திவிடுவது நல்லது, காற்று புகாதபடி அடைத்து வைத்து குளிர்சாதனபெட்டியில் 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
பக்கவிளைவுகள் இருக்கா?
- சரியாக சுத்தம் செய்யாமல் சமைக்கும் போது, ஒவ்வாமை மற்றும் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
- குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.
- சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல், தொண்டை வறண்டு போதல் போன்ற பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
- சாப்பிட்ட 30 நிமிடங்களில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்படலாம், வயிற்றில் ஒருவித சத்தமும் கேட்கலாம்.