அடிவயிற்று கொழுப்பை கரைத்து விரட்டும் ஒரு துளி சாறு.... மிளகுடன் பருகினால் 1 மணி நேரம் வரை இந்த தவறை செய்யாதீர்கள்!
நாம் ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை கட்டுப்பாட்டான முறையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைப்பது என்பது நிறைய பேருக்கு சிக்கலான காரியம்.
கொழுப்பை கரைக்க விரும்புபவர்கள் சில இயற்கையான பானங்களை அருந்துவது பயனளிக்கும்.
இன்று எலுமிச்சை சாற்றை தினமும் எடுத்து கொள்வதால் எப்படி கொழுப்பு கரையும் என்பது குறித்து பார்க்கலாம்.
எலுமிச்சையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.
எலுமிச்சையில் விட்டமின் சி ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களுடன் பாலிஃபீனால்கள் மற்றும் டானின்கள் உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருளும் உள்ளன.
எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உடல் எடையை குறைத்து வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும். காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை நீங்கள் பருகி வரலாம்.
எலுமிச்சை சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி டயாபெட்டிக், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் போன்ற பண்புகள் உள்ளன.
இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. பசியை அடக்குகிறது.
கொழுப்பு செல்கள் உள்ளுறுப்பில் இருக்கும் கொழுப்பை கரைக்க உங்களை தூண்டும். அது மட்டும் இல்லாமல் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆன்டி பாக்டீரியல் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
1 டம்ளர் தண்ணீர் உடன் 1/4 பங்கு லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதனுடன் சுவைக்கு 1 டீ ஸ்பூன் தேன் அல்லது இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
மிளகும் சேர்த்து பருகலாம்....
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர எடை குறையும்.
குறிப்பாக, இதைக் குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும்.
இந்த பானத்தைக் குடித்து ஒரு மணி நேரம் வரை வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. குறிப்பாக காபி, டீ கையிலேயே தொடக் கூடாது.
மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்பு செல்களைக் கரைக்கும்.