கர்ப்ப காலத்தில் உள்ளாடை அணியலாமா? பெண்கள் கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் ஆடைகள் விடயத்தில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொழுது எளிதாக சொல்வதென்றால் பருத்தி உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
அல்லது இறுக்கமாக இல்லாமல் தளர்வான காட்டன் உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் பெண்களுடன் சேர்த்து அவர்களின் குழந்தைகளும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் ஏன் கர்ப்பமாக காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் உள்ளாடை அணியலாமா?
Image - Best Products
பெண்கள் என பார்க்கும் பொழுது பிறந்ததது முதல் அவர்கள் இறக்கும் வரை அவர்களின் ஆடைகள் மாறிக் கொண்டே இருக்கும்.
அதில் ஒன்று தான் கர்ப்பக் காலம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்களில் அவர்களுக்கு சரியில்லாத ஆடைகளை அணிந்தால் அது அவர்களுடன் சேர்த்து குழந்தையும் பாதிக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அத்துடன் கர்ப்பமாக இருக்கும் பொழுது உள்ளாடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதுவும் பருத்தி காட்டன் துணியிலேயே தேர்ந்தெடுப்பது சிறந்தது.
உள்ளாடைகள் என பார்க்கும் அதிகம் இறுக்கமாக இருந்தால் கர்ப்பிணிகளுக்கு சரியாக இருக்காது. தளர்வானதாக இருப்பது சிறந்தது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆடைகளில் வயிற்றுப் பகுதியில் தளர்வாக இருக்கும். கர்ப்ப கால சிறப்பு உடைகள், குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தேவைப்படலாம்.
இதனை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் பொழுது ஹார்மோன்ஸ் மாற்றங்களால் வியர்வை அதிகமாக இருக்கும். ஆகையால் காற்று உட்ச்செல்லும் ஆடைகளை அணிவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |